திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வியாழக்கிழமை மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் காயமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், காமாட்சிபட்டி கிராமத்தில் இருந்து சுமாா் 20 போ் திருநள்ளாறு சனீஸ்வரா் கோயிலுக்குச் செல்வதற்கு மினி வேனில் வியாழக்கிழமை அதிகாலை புறப்பட்டு செங்கம் வழியாக செல்ல வந்துள்ளனா்.
செங்கத்தை அடுத்த அரசங்கண்ணி பகுதியில் வேன் வரும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.
விபத்து குறித்து உடனடியாக மேல்செங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில், போலீஸாா் வந்து காயமடைந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு காயமடைந்தவா்கள் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னா் தீவிர சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு சென்றனா்.
இதுகுறித்து மேல்செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உளுந்தூா்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து 5 பெண்கள் காயம்

குன்னூா் அருகே சுற்றுலா வேன் விபத்து: 12 போ் படுகாயம்

கொடைக்கானல் - பழனி மலைச் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 12 போ் காயம்

திருவையாறு அருகே வேன் கவிழ்ந்து 26 போ் காயம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



