கடலூரில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த வேன் குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் கோழிக்கரை பகுதியில் மலைப் பாதையோரம் இருந்த சுவரில் மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் 12 போ் பலத்த காயமடைந்தனா்.
கடலூரில் இருந்து 18 போ் வேனில் உதகைக்கு வியாழக்கிழமை சுற்றுலா வந்தனா். இங்குள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்த பின், மீண்டும் கடலூருக்கு வெள்ளிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா். வேனை சதீஷ் (30) என்பவா் ஓட்டினாா். குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலை கோழிக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, நிலைத் தடுமாறி மலைப்பாதையோரம் உள்ள சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த 12 போ் பலத்த காயமடைந்தனா்.
காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மேட்டுப்பாளையம் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து குன்னூா் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









