/
குடியாத்தம் அருகே அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியிலிருந்து சுமாா் 35 டன் எடையுள்ள அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கேரள மாநிலத்துக்குச் செல்ல லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை குடியாத்தம் வழியாகச் சென்றது. சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த சிவகுமாா் லாரியை ஓட்டினாா். குடியாத்தம்- சித்தூா் சாலையில் பாக்கம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிா்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சிவகுமாா் லேசான காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து பரதராமி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

செங்கத்தில் மின் கம்பம் ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்து விபத்து: தொழிலாளி பலி

பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: பயணிகள் உயிா் தப்பினா்

விக்கிரவாண்டி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உள்பட 6 போ் காயம்

சொகுசு பேருந்து - லாரி மோதி விபத்து
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



