அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஏற்றத்துடன் தொடங்கி சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை!

நுகர்வு பொருள்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, மென்பொருள் உள்ளிட்ட துறைகள் 0.5-1% வரை ஏற்றம் கண்டன.

News image
கோப்புப் படம்
Updated On :26 நவம்பர் 2024, 10:52 am

DIN

வாரத்தின் 2வது நாளான இன்று (நவ. 26) இந்திய பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது.

வணிக நேரத் தொடக்கத்தில் ஏற்றத்துடன் வணிகம் தொடங்கினாலும், புதிய முதலீடுகள் இல்லாததால் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 105 புள்ளிகளும் நிஃப்டி 24200 புள்ளிகளுக்கு கீழும் குறைந்தது.

நுகர்வு பொருள்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, மென்பொருள் உள்ளிட்ட துறைகள் ஏற்றம் கண்டு நேர்மறையாக இருந்தன. இவை 0.5-1% வரை உயர்ந்திருந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 105.79 புள்ளிகள் சரிந்து 80,004.06 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.13 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27.40 புள்ளிகள் சரிந்து 24,194.50 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.11 சதவீதம் சரிவாகும்.

16 நிறுவனப் பங்குகள் சரிவு

வணிக நேரத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்ந்து 80,415.47 புள்ளிகளாக இருந்தது. படிப்படியாக உயர்ந்து 80,482.36 என்ற இன்றைய அதிகபட்சத்தை எட்டியது. எனினும் பிற்பாதியில் சரியத் தொடங்கியது. வணிக நேர முடிவில் 105 புள்ளிகள் சரிந்து 80,004 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. சென்செக்ஸ் அதிகபட்சமாக 79,798.67 புள்ளிகள் வரை இன்று சரிந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 14 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 16 நிறுவனங்களின் பங்குகள் சரிந்திருந்தன.

அதிகபட்சமாக ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனப் பங்குகள் 1.85% உயர்ந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக இன்ஃபோசிஸ் 1.83%, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் 1.09%, டிசிஎஸ் 0.88%, டெக் மஹிந்திரா 0.74%, ரிலையன்ஸ் 0.68%, டாடா ஸ்டீல் 0.56% உயர்வுடன் காணப்பட்டன.

இதேபோன்று அதானி போர்ட்ஸ் பங்குகள் -3.26% வரை சரிவைச் சந்தித்தது. இதற்கு அடுத்தபடியாக அல்ட்ராடெக் சிமென்ட் -2.94%, சன் பார்மா -2.08%, எம்&எம் -1.99%, என்.டி.பி.சி., -1.84%, டாடா மோட்டார்ஸ் -1.71%, எல்&டி -1.35%, பவர் கிரிட் -1.16% சரிந்திருந்தன.

நிஃப்டி நிலவரம்

வணிக நேரத் தொடக்கத்தில் 24,343.30 புள்ளிகளுடன் நிஃப்டி தொடங்கியது. எனினும் இன்றைய வணிகப் போக்கில், தொடர்ந்து சரிவையே சந்தித்தது. அதிகபட்சமாக 24,125.40 புள்ளிகள் வரை நிஃப்டி சரிவைச் சந்தித்தது. வணிக நேர முடிவில் 27 புள்ளிகள் சரிந்து 24,194 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் டாடா டெலிசர்வீஸ், காப்ரி குளோபல், சொனாட்டா சாஃப்ட்வேர், பிராமல், வோடாஃபோன், திரிவேனி டர்பைன், கேப்லின் பாயின்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்வுடன் காணப்பட்டன.

இதேபோன்று பாலி மெடிகியூர், அதானி கிரீன், பிஎஸ்இ, அதானி என்டர்டெயின்மென்ட், அதானி டிரான்ஸ்மிஷன், கில்லட் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன.

துறை ரீதியாக, ஆட்டோ, எனர்ஜி, நிதி, தனியார் வங்கிகள் அடங்கிய துறைகள் சரிவைக் கண்டன. ஐடி, பொதுத் துறை வங்கிகள், ரியாலிடி, மீடியா, நுகர்வு பொருள்கள் துறைகள் ஏற்றத்துடன் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.