கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு!

பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியில் வர்த்தகாமவது பற்றி...

News image
பங்குச் சந்தை - ANI
Updated On :4 மார்ச் 2026, 5:18 am

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரால், இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 1653.10 புள்ளிகள் சரிந்து 78,585.75 புள்ளிகளாக தொடங்கிய நிலையில், காலை 10.40 மணியளவில் 78,776.24 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 530.85 புள்ளிகள் குறைந்து 24,334.85 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ வங்கி, ஐசிசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிவுடனும், பாரதி ஏர்டெல், இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா ஆகிய பங்குகள் ஏற்றத்துடனும் வர்த்தகமாகி வருகின்றன.

நிஃப்டி பார்மா, நிஃப்டி வங்கி, நிஃப்டி ஸ்மால்கேப் ஆகிய பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.