ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பட்ஜெட்: சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

இன்றைய பங்குச் சந்தை வர்த்தகம் பற்றி...

News image
தேசிய பங்குச்சந்தை- ANI
Updated On :30 ஜனவரி 2026, 12:48 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பங்குச் சந்தைகள் இன்று(ஜன. 30, வெள்ளிக்கிழமை) சரிவுடன் நிறைவு பெற்றுள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,947.31 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில், காலையில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை குறைந்தது.

பின்னர் சற்று ஏற்றமடைந்த நிலையில் சென்செக்ஸ் 296.59 புள்ளிகள் குறைந்து 82,269.78 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 98.25 புள்ளிகள் குறைந்து 25,320.65 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

இன்று சென்செக்ஸ் பங்குகளில் டாடா ஸ்டீல், பவர் கிரிட், ஐசிஐசிஐ வங்கி, எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

மறுபுறம் எம் அண்ட் எம், ஐடிசி, எஸ்பிஐ, பாரத் எலக்ட்ரானிக்ஸ், டைட்டன் ஆகியவை 1.3 சதவீதம் வரை உயர்ந்து வர்த்தகமாகின.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.19 சதவீதம் சரிந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடு 0.32 சதவீதம் உயர்ந்தது.

துறைவாரியாக, ​​நிஃப்டி மெட்டல் குறியீடு 5 சதவீதத்திற்கும் மேல் சரிந்து பெரும் இழப்பைச் சந்தித்தது. நிஃப்டி ஐடி பங்குகளும் 1% சரிந்தன. நிஃப்டி மீடியா, எஃப்எம்சிஜி குறியீடுகள் ஏற்றமடைந்தன.

கடந்த 3 நாள்கள் பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமான நிலையில் இன்று சரிவுடன் நிறைவு பெற்றுள்ளன.

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றம், வெளிநாட்டுப் பங்குகள் அதிகம் விற்பனை ஆகியவை பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

பிப். 1 ஆம் தேதி 2026- 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி அன்று பங்குச்சந்தைகள் வர்த்தகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் இன்று பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 91.98 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.