அரசியலமைப்பை காங்கிரஸ் மதிக்கவில்லை: ஜெ.பி. நட்டா

ஆட்சியில் இருந்தபோதுகூட காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை உணர்வுப்பூர்வமாக மதிக்கவில்லை என ஜெ.பி. நட்டா விமர்சித்தார்.
ஜெ.பி. நட்டா
ஜெ.பி. நட்டா IANS
Published on
Updated on
1 min read

ஆட்சியில் இருந்தபோதுகூட காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை உணர்வுப்பூர்வமாக மதிக்கவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று (நவ. 26) விமர்சித்தார்.

நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, தில்லி பாஜக தலைமையகத்தில் பேசிய ஜெ.பி. நட்டா, அரசியலமைப்பின் முக்கியத்துவம் குறித்தும் இதன் உருவாக்கத்தில் பி.ஆர். அம்பேத்கரின் பங்களிப்பு குறித்தும் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

’’அரசியலமப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75ஆம் ஆண்டில், இதனை உருவாக்கிய அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாம் அனைவரும் இங்கு ஒன்றுகூடியுள்ளோம். அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக இருந்து நாட்டிற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தார். இந்திய வரலாற்றில் இது மிகப்பெரிய முன்னேற்றம்.

அரசியலமைப்பு என்பது டாக்டர் அம்பேத்கரால் நமக்கு வழங்கப்பட்ட பரிசு. இதனை வலுவாக ஏற்றுக்கொண்டு நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச்செல்வது நமது கடமை.

மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நாள் இது. இந்த நாளில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களை நினைவுகூர்வோம். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பலர் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். அவர்களுக்கு மரியாதை செலுத்துவோம்.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, அரசியலமைப்பு பெருமை அணிவகுப்பைத் தொடக்கிவைத்தார். பின்னர் 2014ஆம் ஆண்டில் பிரதமரானதும் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் மூலம் நவ. 26ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாக அறிவித்தார். 2015-ல் இது அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

இது நம் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான நாள். ஆனால், இதற்கு முன்பு நம்மை ஆட்சி செய்தவர்களுக்கு அரசியலமைப்பின் மீது உணர்வுப்பூர்வமான இடம் இல்லை. இப்போதும் இல்லை.

இரண்டு நாள் விவாதத்திற்குப் பிறகு, முதல் முறையாக சம்விதன் திவாஸ் கொண்டாடப்பட்டது. அனைத்து மாநிலங்களும் சமம்; அவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்பதை அரசியலமைப்புச் சட்டம் தெளிவாகக் கூறுகிறது.

ஒரு கட்சி மட்டும் தங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியலமைப்பின் மதிப்பை குறைக்கும் வகையிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவசர நிலை, கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது மற்றும் ஏராளமான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாம் அரசியலமைப்பின் பாதுகாவலர்கள். அதன் கொள்கைகளுக்கு காப்பவர்களும் நாம்தான்’’ என ஜெ.பி. நட்டா குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பின்வாங்கும் சர்வதேச முதலீட்டாளர்கள்: நெருக்கடியில் அதானி குழுமம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com