
அருணாசலப் பிரதேசத்தில்சுவர் எழுப்ப முயன்றகட்டுமானத் தொழிலாளர்கள் மீது மண் சரிந்ததால் இருவர் பலியாகினர்.
அருணாசலப் பிரதேசத்தில் உள்ள இட்டாநகரில் டோனி காலனியில் சுவர் எழுப்பதற்காக நிலத்தைத் தோண்டியபோது, குவித்து வைக்கப்பட்டிருந்த மண் குவியல் சரிந்து, விபத்தானது. இந்த விபத்தின்போது 4 பேர் பணியில் இருந்ததால், அவர்களின்மேல் மண் குவியல் மூடி மறைத்தது.
இதனையடுத்து, உடனடியாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுமார் 5 மணிநேரப் போராட்டத்திற்கு பின்னர் விபத்தில் சிக்கிய 4 பேரும் மீட்கப்பட்டனர்.
இருப்பினும், அவர்களில் அஸ்ஸாமைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஜகன் ஹேம்ரான்(45), விஜய் பேக் இருவரும் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டனர்.
மேலும், இருவர் கணேஷ் ஓரன் மற்றும் ஜோசப் டோப்னு ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து, இயற்கைக்கு மாறான மரணம் என்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி, எந்தவித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக மண் தோண்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடப்பதாக இட்டாநகர் துணை ஆணையர் தலோ தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.