ஜார்க்கண்டின் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

ஜார்க்கண்டின் 14-வது முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக்கொண்டார்..
முதல்ராக பதவியேற்ற ஹேமந்த் சோரன்
முதல்ராக பதவியேற்ற ஹேமந்த் சோரன்
Published on
Updated on
1 min read

ஜார்க்கண்டின் 14-வது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ராஞ்சியில் மொராபாடி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோரனுக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 49 வயதாகும் சோரன் முதல்வராக பதவியேற்பது இது நான்காவது முறையாகும்.

பதவியேற்பு விழாவிற்கு ஹேமந்த் சோரன் குர்தா மற்றும் பைஜாமா அணிந்திருந்தார். பதவியேற்பதற்கு முன், ஜேஎம்எம் தலைவரும், அவரது தந்தையுமான ஷிபு சோரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தந்தை ஷிபு சோரனை சந்தித்து வாழ்த்து பெற்ற ஹேமந்த் சோரன்
தந்தை ஷிபு சோரனை சந்தித்து வாழ்த்து பெற்ற ஹேமந்த் சோரன்

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் 56 இடங்களுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்திய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.

முன்னதாக, ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் புதிய எம்எல்ஏ-க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சட்டப்பேரவைக் குழு தலைவராக ஹேமந்த் சோரன் தோ்வு செய்யப்பட்டாா். தொடா்ந்து ஆளுநா் மாளிகைக்குச் சென்று ஆளுநா் சந்தோஷ் கங்வாரிடம் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரன் உரிமை கோரியிருந்தார்.

இதையடுத்து, கடந்த 2000-ஆம் ஆண்டு நவ.15-இல் பிகாரை பிரித்து ஜாா்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. அந்த மாநிலத்தின் முதல்வராக 4-ஆவது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, ஷிபு சோரன், தமிழக துணை முதல்வர் உதயநிதி, மேற்குவங்க முதல்வர் மம்தா, ஆம் ஆத்மி கட்சியில் ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.