கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் சாத்தியமில்லை என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமைச்சரவை விரிவாக்கத்திற்கான சூழ்நிலை வரவில்லை. அந்த ஒரு காலியிடத்தை நிரப்புவதற்கான எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசில் அமைச்சரவையின் மொத்த பலம் 34 அமைச்சர்கள். இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் உள்பட 32 அமைச்சர்களும் அடங்குவர்.
முன்னதாக தலைநகர் தில்லி சென்றுள்ள கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.