அமிர்தசரஸில் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள நூர்பூர் பத்ரியில் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிநவீன கைத்துப்பாக்கிகளை பஞ்சாப் காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 2 பேரைக் அவர்கள் கைது செய்துள்ளனர்.
ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக மற்றொரு நபருக்காக காத்திருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் அமிர்தசரஸின் கவுலோவால் கிராமத்தைச் சேர்ந்த ஜக்ஜித் சிங் மற்றும் குர்விந்தர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டிஜிபி யாதவ் கூறுகையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் கனரக ஆயுதங்கள் கடத்துவதில் சிலர் ஈடுபட்டது போலீஸ் குழுக்களுக்கு உளவுத்துறை மூலம் தெரிய வந்தது.
விரைந்து செயல்பட்ட போலீஸ் குழுக்கள் பொறி வைத்து ஜக்ஜித் சிங், குர்விந்தர் சிங் ஆகியோரை கைது செய்தனர்.
இதில் தொடர்புடைய முக்கிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரைப் பிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.