தாம்பரத்தில் மின்சார ரயில்கள் சேவை நிறுத்தம்

தாம்பரத்தில் மின்சார ரயில்கள் சேவை நிறுத்தம்

சென்னை பல்லாவரம் பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையிலான மின்சார சேவை நிறுத்தப்பட்டுள்ளது
Published on

சென்னை: சென்னை பல்லாவரம் பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையிலான மின்சார சேவை நிறுத்தப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் வெள்ளிக்கிழமை உருவான “ஃபென்ஜால்” புயல்" மாமல்லபுரம்-புதுச்சேரிக்கு இடையே சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை(டிச.1) கரையைக் கடக்கக் கூடும் எனவும், இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை பல்லாவரம் பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் புறநகர் மின்சார ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயில்கள் சேவை, செங்கல்பட்டு முதல் வண்டலூர் வரையே இயக்கப்படும். பலத்த காற்று வீசுவதால் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையேயான மின்சார ரயில்கள் சேவை சனிக்கிழமை பிற்பகல் 12.14 மணி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

விமான நிலையம் மூடல்

சென்னையில் புயல் கனமழையால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை 7 மணி வரை எந்த விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்