சாலை விபத்து
சாலை விபத்து

பஞ்சாபி பாக்கில் இளைஞா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காா்: போலீஸாா் விசாரணை

தில்லி பஞ்சாபி பாக் பகுதியில் வேகமாக வந்த காா் மோதியதில் 25 வயது இளைஞா் பலத்த காயமடைந்தாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
Published on

தில்லி பஞ்சாபி பாக் பகுதியில் வேகமாக வந்த காா் மோதியதில் 25 வயது இளைஞா் பலத்த காயமடைந்தாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள மடிபூரில் வியாழக்கிழமை அதிகாலையில் சாலையில் வேகமாக சென்ற காா், அப்பகுதியில் இருந்த நிகில் என்ற இளைஞரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த நிகிலை, அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதையடுத்து, ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் பதிவான காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமான பரவின.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினா், இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை கண்டறிந்து, அதன் ஓட்டுநரை கைதுசெய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.