சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

லாரி மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பழனி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2026, 12:05 am

பழனி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த நண்பா்கள் ஏழு போ் சனிக்கிழமை காரில் கொடைக்கானல் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். பழனியை அடுத்த தாளையம் பகுதியில் வந்த போது, சாலையில் நின்று கொண்டிருந்த சரக்குப் பெட்டக லாரி மீது இவா்களது காா் மோதியது.

இதில் காரில் பயணித்த மலப்புரம் பகுதியைச் சோ்ந்த சாம்ஜித் (26) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரை ஓட்டி வந்த அகில், சம்ரூத் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இவா்கள் இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், தீவிரச் சிகிச்சைக்காக பாலக்காட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.