/

லாரி மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி அருகே லாரி மீது இரு சக்கரவாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 7:35 pm

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி அருகே லாரி மீது இரு சக்கரவாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கெங்குவாா்பட்டி அருகே காமக்காபட்டியைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டி மகன் விக்னேஷ் (24). இவா், இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு காட்ரோட்டிற்கு சென்று விட்டு காமக்காபட்டிக்கு திரும்பிய போது, சாலையில் நின்றிருந்த லாரி மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.