Modi
தூய்மைப் பணியில் பிரதமர் நரேந்திர மோடிபடம்: மோடி எக்ஸ்

பள்ளி மாணவர்களுடன் தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி!

மாணவர்களுடன் மோடி தூய்மைப் பணிகளை மேற்கொண்டது பற்றி...
Published on

பள்ளி மாணவர்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தூய்மைப் பணிகளை மேற்கொண்டார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று காலை மலர்தூவி பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து தில்லியில் உள்ள பள்ளியின் மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டார்.

அனைவருக்கும் அழைப்பு!

மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்ட பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

“காந்தி ஜெயந்தியான இன்று, எனது இளம் நண்பர்களுடன் இணைந்து தூய்மைப் பணியை நான் மேற்கொண்டேன்.

இன்றைய நாளில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள அனைவருக்கு அழைப்பு விடுப்பதுடன், தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்தவும் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றொரு பதிவில், “இன்று தூய்மை இந்தியாவின் பத்தாம் ஆண்டை கொண்டாடுகிறோம். இது இந்தியை தூய்மை செய்ய மேம்பட்ட சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கான முக்கிய முயற்சியாகும். இந்த திட்டம் வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் தலைவணங்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com