ஜப்பானின் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து!

ஜப்பானின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஷிகேரு இஷிபா | நரேந்திர மோடி
ஷிகேரு இஷிபா | நரேந்திர மோடி
Published on
Updated on
1 min read

பதவியேற்ற ஜப்பானின் புதிய பிரதமர் ஷிகேரு இஷிபாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க:விஜய் 69 படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே!

அந்தப் பதிவில், “ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-ஜப்பான் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், இந்தோ-பசிபிக்கில் அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்தவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் விரும்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஊழல் வழக்கில் சிக்கி பதவி விலகியதையடுத்து ஷிகேரு இஷிபா புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இதையும் படிக்க:பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மீண்டும் பதவி விலகினார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com