இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக அமைந்தது. மிகச்சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக நன்றி. 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இஸ்ரேல் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பரந்த அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
குறிப்பாக தொழில்நுட்பம், நீர்மேலாண்மை, விவசாயம், அறிவுசார் கூட்டு ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றில் இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கத்தை அதிகரிக்க வழிவகை செய்யும் வகையில் பேச்சுவார்த்தை அமைந்தது. பிராந்திய அளவிலான முக்கிய முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்தோம் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரு நாள்கள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேலுக்கு இன்று (பிப். 25) சென்றுள்ளார். தலைநகர் டெல் அவிவ் சென்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தார். அப்போது நெதன்யாகுவின் மனைவி சாரா நெதன்யாகுவும் உடன் இருந்தார்.
பின்னர் இஸ்ரேல் அரசு முறைப்படி மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெதன்யாகு உடனான சந்திப்புக்குப் பிறகு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
Summary
PM Modi holds excellent meeting with Netanyahu aimed at boosting bilateral ties
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






