மத்திய பிரதேச மாநிலத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் கவிழ்ந்த நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மண்டல ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.
ரயில் கவிழ்ந்தது எப்படி?
தில்லி - மும்பை வழித்தடத்தில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இருந்து போபால் அருகேவுள்ள பகானியா ரயில் நிலையம் நோக்கி வியாழக்கிழமை நள்ளிரவு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, தண்டவாளத்தில் இருந்து திடீரென தடம்புரண்ட சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயில் சேவை பாதிப்பில்லை
ரயில் விபத்து குறித்து மண்டல ரயில்வே மேலாளர் ராஜ்னீஷ் குமார் கூறியதாவது:
“மூன்று பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தடம் புரண்ட ஒரு பெட்டி மீட்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு பெட்டிகளை மீட்பதில் சிறிய சிரமம் உள்ளது. ஆனால், விரைவில் மீட்கப்படும்.
சம்பவ இடத்தில் தடம்புரண்டதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த விபத்து காரணமாக எந்தவொரு ரயிலும் ரத்து செய்யப்படவில்லை. சில ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
மேலும், ரயில் கவிழ்ந்த சம்பவத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணைக் குழு விசாரித்து வருகின்றது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.