
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்ததால், நேற்று இரவு 9 மணியளவில் ஜம்ஷெத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரத்தத்தில் இருந்த சர்க்கரை அளவை மருத்துவர்கள் குறைத்துள்ளதாகவும், தற்போது சோரன், சோர்ந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவில் இணைந்த சம்பயி சோரன்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியில் இருந்த சம்பயி சோரன், ஹேமந்த் சோரன் சிறையில் இருந்தபோது முதல்வராக பொறுப்பேற்று மாநில நிர்வாகத்தை கவனித்து வந்தார்.
இதையும் படிக்க | தில்லி: ராம்லீலா நிகழ்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் மரணம்
ஹேமந்த் சோரன் சிறையிலிருந்து வெளியே வந்ததால், சம்பயி சோரன் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், கட்சியில் தனக்கு மரியாதைக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, ஜேஎம்எம் கட்சியில் இருந்து விலகி ஆக. 30ஆம் தேதி சம்பயி சோரன் பாஜகவில் இணைந்தார். மேலும், தனது எம்.எல்.ஏ. பொறுப்பையும் ராஜிநாமா செய்தார். இதனால் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
67 வயதான பழங்குடி இனத்தைச் சேர்ந்த சம்பயி சோரன், 1990களில் மாநிலத்தை பிரித்து சுய ஆட்சி அமைத்ததில் பெரும்பங்கு ஆற்றியவர். மாநிலத்திற்கு செய்த பணிகளுக்காகவும், சேவைகளுக்காகவும் ஜார்க்கண்ட் புலி என அழைக்கப்படுகிறார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... மகளிரால் மட்டுமே முடியும்!
இந்நிலையில், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்ததாகக் கூறி ஆக. 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஜம்ஷெத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தற்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்துள்ளதாகவும், அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மருத்துவர் சுதிர் ராய் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.