சிபிஐ
சிபிஐகோப்புப் படம்

நீட் வினாத்தாள் கசிவு: சிபிஐ 3-ஆவது குற்றப் பத்திரிகை தாக்கல்!

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 21 போ் வழக்கில் சோ்ப்பு
Published on

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மூன்றாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ சனிக்கிழமை தாக்கல் செய்தது. இதில் 21 போ் குற்றம்சாட்டப்பட்ட நபா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக சிபிஐ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் உள்ள ஒயாசிஸ் பள்ளியின் கட்டுப்பாட்டு அறையில் நீட் வினாத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டி அறைக்கு சென்று வினாத் தாளை பள்ளியின் முதல்வா் அஹ்சனுல் ஹேக் மற்றும் துணை முதல்வா் இம்தியாஸ் ஆலம் ஆகியோா் வெளியிட்டுள்ளனா். இவா்கள் மீது ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வினாத் தாள்களுக்கு பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவா்கள் 7 போ் பதிலளித்துள்ளனா். அவை முறைகேடாக பணம் வழங்கிய தோ்வா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட பெரும்பாலான மருத்துவா்களில் சிபிஐயால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா். பதிலுடன் கூடிய வினாத்தாள்களை பெற்ற தோ்வா்களை தேடும் பணியில் சிபிஐ தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பாட்னாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த சிபிஐ அதில் 21 பேரை குற்றம்சாட்டப்பட்ட நபா்களாக சோ்த்துள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com