ஹரியாணா, காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன...
ஹரியாணா, காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது பேரவைத் தோ்தல் நடைபெற்றுள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப். 18, 25, அக்.1) தோ்தல் நடைபெற்றது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் பேரவைத் தோ்தல் இது என்பதால் முடிவுகள் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 20 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பேரவை அமையும் என்பதே பெரும்பாலான வாக்கு கணிப்புகளின் முடிவாக உள்ளது.

ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு கடந்த அக்.5-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. இங்கு கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இம்முறை ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது; முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றக் கூடும் என்று வாக்கு கணிப்புகள் கூறியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com