ரத்தன் டாடா யார்? டாடா குழுமத்தை ஜேஆர்டி டாடா ஒப்படைத்த சுவாரஸ்ய நிகழ்வு!

டாடா குழுமத்தின் நிர்வாகத்தை ரத்தன் டாடாவிடம் ஜேஆர்டி டாடா ஒப்படைத்த சுவாரஸ்ய நிகழ்வு!
ரத்தன் டாடா
ரத்தன் டாடா
Published on
Updated on
2 min read

டாடா குழுமத்தின் நிறுவனர் ஜேஆர்டியின் வளர்ப்புப் பேரன் நாவல் டாடாவின் மகன் ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ், எந்த இடையூறும் இல்லாமல் வந்தது என்றால், டாடா குழுமம் வந்தது என்றால், அதற்கு ஒரே காரணம், ரத்தன் டாடாவின் எளிமையான குணமும் திறமையும்தான்.

அவர் தனது வாழ்நாளில் அளப்பட்ட சாதனைகளைப் படைத்தாலும், அவரது எளிமையும், தன்னடக்கமுமே அவரது அடையாளமாக இருந்ததுதான் இன்று நாடே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தக் காரணமாக இருந்தது.

பிறந்தது முதல் மிக ஆடம்பர வாழ்முறையிலேயே வளர்ந்தாலும், எந்த ஆடம்பர அழுக்கும் அவரை ஒட்டிக்கொள்ளவில்லை. ஒட்டிக்கொள்ள விடவும் இல்லை. தன்னடக்கமும் எளிமையும் தான் அவரது கவச உடையாகவே திகழ்ந்தது. அவரது கருணை உள்ளம், அவர் மிகப்பெரிய உச்சங்களைத் தொட உதவியது, சுமார் 100 நாடுகளில் டாடா குழுமத்தின் நிறுவனங்கள் கிளை பரப்பியுள்ளன. எரிசக்தி, ஆட்டோமோடிவ், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் என பல துறைகளில் அந்த நிறுவனம் வெற்றிக்கொடி நாட்டியிருந்தது. டாடா குழும நிறுவனங்களில் சுமார் 8 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.

மும்பையில் 1937ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி பார்சி குடும்பத்தைச் சேர்ந்த நாவல் டாடா - சூனி தம்பதிக்கு பிறந்தார் ரத்தன் டாடா. ரத்தன் டாடாவுக்கு 10 வயதாகும்போதே, அவரது பெற்றோர் விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டனர்.

அதன்பிறகு, அவரது பாட்டி நவாஸ்பாய் டாடாவால் வளர்க்கப்பட்டார். அவருக்கு நாவல் டாடா - சிமோனி டாடாவின் மகனும், தனது ஒன்றுவிட்ட சகோதருமான நியோல் டாடாவின் ஆதரவும் கிடைத்தது.

இந்த நிலையில்தான், நாவல் டாடாவை தத்தெடுத்து வளர்த்த ஜேஆர்டி டாடாவின் தலைமையின் கீழ் இருந்த டாடா குழுமம் ரத்தன் டாடாவின் கைக்கு வருகிறது.

1991ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜேஆர்டி, டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடாவை நியமிக்கிறார். இதற்குக் காரணம், ஜேஆர்டி டாடாவுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவுதான். திடீரென இதய நோய் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜேஆர்டி, டாடா குழுமத்தை ரத்தன் டாடாவிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார்.

இது குறித்து ரத்தன் டாடா கூறுகையில், இருவரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தோம். திடீரென அவருக்கு உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். நான் தினமும் சென்று பார்த்து வந்தேன். பிறகு மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் அவரை பார்க்க அலுவலகம் சென்றேன்.

என்ன புதிதாக நடந்தது என்று அவர் என்னிடம் கேட்டார். உங்களைப் பார்த்துச் சென்றதற்குப் பிறகு புதிதாக எதுவும் நடக்கவில்லை என பதிலளித்தேன். ஆனால் எனக்கு சொல்வதற்கு புதிதாக ஒன்று உள்ளது என்றார் ஜேஆர்டி.

உடல்நலப் பாதிப்பு மூலம் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். டாடா குழுமத்திலிருந்து விலகுவது என்று, உன்னை தலைமை பொறுப்பேற்கச் செய்யப்போகிறேன் என்று ரத்தன் டாடாவிடம் கூறினார்.

பிறகு, நிர்வாகிகள் கூட்டத்தில், ரத்தன் டாடாவை தலைமை பொறுப்பை ஏற்கச் செய்வது தொடர்பான அறிவிப்பை ஜேஆர்டி வெளியிடுகிறார். சுமார் 40 - 50 ஆண்டு காலம் தான் வகித்து வந்த பொறுப்பை ரத்தன் டாடாவிடம் ஒரே நாளில் அளித்துவிடுவது என்று அவர் எடுத்த முடிவு அப்போது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. இதற்குக் காரணம் ரத்தன் டாடாவின் திறமையும், எளிமையும், பணிவும்தான். இந்த முடிவு எடுக்கப்பட்ட நாள் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் என்றே அன்று பேசப்பட்டது.

பொறுப்புகள் அனைத்தும் ரத்தன் டாடாவிடம் ஒப்படைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜெனிவாவில் ஜேஆர்டி டாடா காலமானார். பல ஆண்டு காலமாக ஜேஆர்டி டாடாவுக்கும் ரத்தன் டாடாவுக்கும் இடையிலான உறவை பலருக்கும் பல சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும். ரத்தன் டாடா ஜாம்ஷெட்பூரில் பணியாற்றத் தொடங்கியபோதுதான் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு உருவானது.

ரத்தன் டாடா தனது 75வது வயதில் 2012ஆம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். ஆனால், டாடா அறக்கட்டளைப் பொறுப்புகளை கடைசி வரை பார்த்துவந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com