
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அவரின் வளர்ப்பு நாய் கோவா, இறுதி அஞ்சலி செலுத்தியது. இந்த விடியோவை டாடா குழுமம் தங்கள் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று (அக். 9) நள்ளிரவு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரின் உடல் நேற்றிரவு மருத்துவமனையில் இருந்து மும்பை கொலாபாவில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவங்கு அவரின் குடும்பத்தினர் சடங்குகளை செய்தனர்.
இதையும் படிக்க | "என் வாழ்க்கையை மாற்றியவர் ரத்தன் டாடா" - சுவாரசிய நிகழ்வைப் பகிர்ந்த கேப்டன் ஸோயா அகர்வால்!
பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக என்சிபிஏ அரங்கிற்கு எடுத்துசெல்லப்பட்டது. அங்கு அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள், மக்கள் என பலர் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாயான கோவா, அவரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. டாடாவின் உதவியாளர் சாந்தனு நாயுடு நாயைத் தூக்கிக்கொண்டார். அப்போது நாய் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது.
இந்த விடியோவை டாடா குழுமம் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, நாய்கள் மீது மிகுந்த பிரியம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஜாகுவார் லேன்ட் ரோவர், டாடா-க்கு சொந்தமானது எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.