
அசாமில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் 4 குழந்தைகள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துப்ரி காவல்துறை கண்காணிப்பாளர் நவீன் சிங் கூறுகையில், கோலக்கஞ்சில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே தங்கள் வீட்டின் முன் அதிகாலையில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது, கார் அவர்கள் மீது மோதியது.
மூன்று குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மற்றொரு குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தது. பலியான குழந்தைகள் மரியம் கட்டூன், ஜூவாய் ரஹ்மான், அபு ரைஹான் மற்றும் மெஹெதி ஹுசைன் என அடையாளம் காணப்பட்டனர்.
காரை அதிவேகமாக ஓட்டிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி மேலும் கூறினார்.