
ஹரியாணாவில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா மாநிலம், தசரா விழாவையொட்டி நடந்த பாபா ராஜ்புரி மேளாவில் கலந்துகொள்வதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் உட்பட ஒன்பது பேர் காரில் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற கார் முந்திரி கிராமத்தின் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் ஓட்டுனர் காப்பாற்றப்பட்டதாகவும், ஆனால் வாகனத்தில் இருந்த ஏழு பேர் நீரில் மூழ்கி பலியானதாகவும் போலீஸார் தெரிவித்தனர். கோமல் என்ற 12 வயது சிறுமி காணவில்லை என்றும், அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் மேலும் கூறினர்.
பலியானவர்கள் சத்விந்தர் (50), சமேலி (65), தீஜோ (45), ஃபிசா (16), வந்தனா (10), ரியா (10), ராமன்தீப் (6) என அடையாளம் காணப்பட்டனர். அனைவரும் கைதலில் உள்ள டீக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இந்த விபத்து இதயத்தை உலுக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையில் உள்ளாட்சி நிர்வாகம் உதவ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.