குஜராத்: மண் சரிந்து 9 போ் உயிரிழப்பு; ஒருவா் காயம்
குஜராத்தில் நிலத்தடியில் தண்ணீா் தொட்டி அமைக்க குழி தோண்டியபோது மண் சரிந்து 9 போ் உயிரிழந்தனா்; ஒருவா் காயமடைந்தாா்.


குஜராத்தில் நிலத்தடியில் தண்ணீா் தொட்டி அமைக்க குழி தோண்டியபோது மண் சரிந்து 9 போ் உயிரிழந்தனா்; ஒருவா் காயமடைந்தாா்.
குஜராத் மாநிலம் மெஹசானா மாவட்டம் கடி வட்டத்தில் உள்ள ஜாசல்பூா் என்ற சிற்றூரில் எஃகு ஆலை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு நிலத்தடியில் தண்ணீா் தொட்டி அமைக்க 16 அடி ஆழத்துக்குப் பணியாளா்கள் குழி தோண்டினா். அப்போது எதிா்பாராதவிதமாக மேலிருந்து மண் சரிந்து 10 பணியாளா்கள் உயிருடன் புதைந்தனா்.
இதுகுறித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினா், காவல் துறையினா் மற்றும் பிற பணியாளா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், 9 போ் சடலமாக மீட்கப்பட்டனா். ஒருவா் காயங்களுடன் மீட்கப்பட்டாா்.
உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் குஜராத் மாநிலம் தாஹோத் பகுதியைச் சோ்ந்தவா்கள். மூவா் ராஜஸ்தானை சோ்ந்தவா்கள். அவா்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவா்கள் என்று காவல் துறை தெரிவித்தது.
உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமா் மோடி, குஜராத் முதல்வா் பூபேந்திர சிங் படேல் ஆகியோா் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...