
அலிகரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிராக்டர் டிராலி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 4 இளைஞர்கள் பலியானார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம், புலந்தசகர் மாவட்டத்தின் திபாய் நகரத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விகாஸ், யாஷ், சுனில் மற்றும் ரவி ஆகியோர் தசரா விழாக்களில் கலந்துகொண்டு சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்களுடைய இருசக்கர வாகனம் அலிகார் நகரின் புறநகர்ப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் டிராலி மீது மோதியது.
நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்த இளைஞர்களை மீட்டு ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். யாஷின் தாத்தா ஹரி ஓம் ஷர்மா கூறுகையில், இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட் மூலம் அடையாளம் கண்ட போலீஸார், பலியானவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
தனக்கு தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மற்ற கிராம மக்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தேன் என்றார். பலியான நான்கு இளைஞர்களும், உறவினர்கள் அல்லது நெருங்கிய குடும்ப நண்பர்கள் ஆவர். அவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். சடலங்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.