
லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வானுக்கு ’இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) நியமிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தால் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கு மத்திய ரிசர்வ போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுத் துறை சார்பில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சிராக் பாஸ்வானுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்புத் தொடர்பான காரணங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
இதன் காரணமாக மத்திய அரசு சார்பில் அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
”அக்.10 முதல் சிராக் பாஸ்வானுக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக, இரண்டாவது உயரிய பாதுகாப்பான ‘ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படை’ (எஸ்.எஸ்.பி) சார்பில் அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
தற்போது அவருக்கு பாதுகாப்பு உயர்த்தப்பட்டதற்கானக் காரணங்கள் தெரியவில்லை. அச்சுறுத்தல் தொடர்பாகக் கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பாதுகாப்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும்” என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) ’இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.