
நேபாளத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற பஹ்ரைச் வன்முறைக் குற்றவாளிகள் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் ஏற்பட்ட வன்முறையின் முக்கிய குற்றவாளிகள் காவல்துறையினர் பிடியில் இருந்து நேபாளத்துக்குத் தப்பிச்செல்ல முயன்றபோது காவல் துறை அதிகாரிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.
பஹ்ரைச் வன்முறை வழக்கின் சந்தேகப்படக்கூடிய நபர்களில் ஒருவரான சர்ஃபராஸ் வியாழக்கிழமை உத்தரப் பிரதேச காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நேபாளத்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது தாலிப் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தப்பியோட முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, பஹ்ரைச் மஹாகஞ்ச் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துர்க்கா பூஜை ஊர்வலத்தின் போது சத்தமாக இசைப் பாடல்கள் எழுப்பப்பட்டதாக ஏற்பட்ட வன்முறையில் வன்முறையில் ராம் கோபால் வர்மா என்பவர் கொல்லப்பட்டார். மேலும், சிலர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் பலரது வீடுகள், கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. மேலும், பல்வேறு வழக்குகளில் 55 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரி பவித்ரா திரிபாதி கூறுகையில், “மரணத்திற்கான காரணம் துப்பாக்கி சூடு காயங்கள் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் வேறு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. வதந்திகளையும், தவறான தகவல்களையும் பரப்புவதைத் தவிர்க்கவும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பை வலுப்படுத்த அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.