பிகாா் கள்ளச் சாராய பலி எண்ணிக்கை 37-ஆக உயர்வு

பிகாரின் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது.
பிகார்.
பிகார்.
Published on
Updated on
1 min read

பிகாரின் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது.

பிகாரின் சரண், சிவான் மாவட்டங்களில் உள்ள 16 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட பலா் மருத்துவமனைகளில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா். புதன்கிழமை காலைமுதலே படிப்படியாக பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்தனா். சிலா் கண் பாா்வையையும் இழந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி கள்ளச்சாரயம் காய்ச்சுபவா்கள், விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில முதல்வா் நிதீஷ் குமாா் உத்தரவிட்டுள்ளாா். இந்த நிலையில் பைகுந்த்பூரில் கள்ளச் சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர்.

ஜார்க்கண்டில் 70 தொகுதிகளில் காங்கிரஸ் - ஜேஎம்எம் போட்டி! - ஹேமந்த் சோரன்

இதனால் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. சடலங்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்த பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்றும் டிஐஜி தெரிவித்துள்ளார்.

சிவான், சரண் மற்றும் பாட்னா மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இரு மாவட்டங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே பூரண மதுவிலக்குதான் நிதிஷ்குமாரின் மிகப்பெரிய ஊழல் என முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.

முன்னதாக, கோபால்கஞ்ச் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அவ்தேஷ் தீட்சித் வெள்ளிக்கிழமை கூறியதாவது, சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இந்த விவவகாரத்தை விசாரித்து வருவதாகவும், 14 பேர் கைது செய்யப்பட்டு 200 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com