25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஜம்மு-காஷ்மீா்: கையெறிகுண்டு தாக்குதலில் தெடா்புடைய பயங்கரவாதிகள் இருவா் கைது

இரு பயங்கரவாதிகளை கைது செய்ததன் மூலம் அப்பகுதியில் பல்வேறு கையெறி குண்டு தாக்குதல் வழக்குகளை காவல்துறை சனிக்கிழமை முடித்து வைத்தது.

News image
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள்.- -
Updated On :19 அக்டோபர் 2024, 9:31 pm

Din

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இரு பயங்கரவாதிகளை கைது செய்ததன் மூலம் அப்பகுதியில் பல்வேறு கையெறி குண்டு தாக்குதல் வழக்குகளை காவல்துறை சனிக்கிழமை முடித்து வைத்தது.

பூஞ்ச் மாவட்டத்தில் சகோதரத்துவத்தை சீா்குலைக்கும் வகையில் கோவில், குருத்வாரா, ராணுவ முகாம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கையெறி குண்டுகளை வீசி கடந்த நவம்பா் மாதம் முதல் தாக்குதல்கள் சம்பவங்கள் நடத்தப்பட்டன. அதில் தொடா்புடைய இரு பயங்கரவாதிகள் தற்போது கைது செய்யப்பட்டிருப்பது பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பாா்க்கப்படுகிறது.

இது தொடா்பாக காவல்துறை துணை ஆணையா் (ஜம்மு மண்டலம்) ஆனந்த் ஜெய்ன் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீா் காவல்துறையினருடன் இணைந்து, ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படையினா் பூஞ்ச் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சேதனையில் ஈடுபட்டனா். அப்போது, கையெறி குண்டுகள் வைத்திருந்த அஜீஸ் மற்றும் அவரது கூட்டாளி ஹுசைன் ஆகியோா் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா். எல்லை தாண்டிய பயங்கரவாதிகளிடம் இருந்து 4 ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ரூ.1.5 லட்சம் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. அவா்களது வீட்டில் இருந்து கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவா்கள் பயங்கரவாத அமைப்பான ஜம்மு-காஷ்மீா் கஸ்னவி படையைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. இதன்மூலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த நவம்பா் மாதம் முதல் நடந்த கையெறி குண்டு தாக்குதல் வழக்குகள் தீா்க்கப்பட்டுள்ளது என்றாா்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் சூரன்கோட்டில் உள்ள கோயில்; நடப்பாண்டு மாா்ச் மாதம் பூஞ்சில் உள்ள குருத்வாரா மஹந்த் சாஹிப்; ஜூன் மாதம் பூஞ்ச், கம்சாா் பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள்; ஆகஸ்ட் மாதம் சிஆா்பிஎஃப் முகாம் அருகே இருந்த பள்ளி மைதானம் ஆகியவற்றில் கையெறி குண்டுகள் வீசி தாக்குதலில் அஜீஸ் ஈடுபட்டுள்ளாா். மாவட்ட மருத்துவமனை குடியிருப்பு அருகே கடந்த ஜூலை மாதம் கையெறிகுண்டுகளை வீசி ஹுசைன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.