ரயில்வே காலி பணியிடங்களை நிரப்ப 10 ஆண்டுகள் போதவில்லையா? ப. சிதம்பரம் கேள்வி!
ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு சரிவர முயற்சிகள் எடுக்காதது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, ரயில்வே துறையில் பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளதாக அரசு ஒப்புக் கொண்டுள்ளது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அரசிதழில் அல்லாத பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 14,63,286 பணியிடங்களில் 2,61,233 பணியிடங்கள் காலியாக உள்ளதாக ரயில்வே ஒப்புக் கொண்டுள்ளது.
இது மொத்தத்தில் 17. 85 சதவீதம் அல்லது 6 -ல் ஒன்று மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.
எதற்காக அந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனை நிரப்ப 10 ஆண்டுகள் முழுவதும் போதவில்லையா?
ஒரு பக்கம் பெரிய வேலைவாய்ப்பின்மை உருவாகியுள்ளது. மற்றொரு பக்கம் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் சரியான கண்காணிப்பின்றி ரயில் விபத்துகள் நடைபெற்று வருகின்றன.
’குறைவான அரசு, நிறைவான ஆட்சி’ என்பதன் பொருள் இதுதானா? இது வெறுமனே மோசமான மற்றும் திறமையற்ற நிர்வாகமாகும்” என்று விமர்சித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.