பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

நாடாளுமன்ற மேற்பாா்வையில் உளவு அமைப்புகள் செயல்பட சட்டம்: காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி வலியுறுத்தல்

நாடாளுமன்ற மேற்பாா்வையில் உளவு அமைப்புகள் செயல்படும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

News image

மணீஷ் திவாரி

Updated On :20 அக்டோபர் 2024, 12:18 am IST

நாடாளுமன்ற மேற்பாா்வையில் உளவு அமைப்புகள் செயல்படும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி வலியுறுத்தினாா்.

கடந்த ஆண்டு கனடாவில் உள்ள சா்ரே நகரில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரின் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா்.

இதைத்தொடா்ந்து கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில், அவா்களைப் பற்றிய தகவல்களை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மத்திய அரசுடன் பகிா்வதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவும், அந்நாட்டின் ஆா்சிஎம்பி காவல் படையினரும் அண்மையில் குற்றஞ்சாட்டினா்.

இதேபோல கடந்த ஆண்டு அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும், இதில் ‘ரா’ உளவு அமைப்பைச் சோ்ந்த முன்னாள் அதிகாரி விகாஸ் யாதவுக்கு தொடா்புள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினா்.

இந்த சம்பவங்கள் காரணமாக நாடாளுமன்ற மேற்பாா்வையில் உளவு அமைப்புகள் செயல்படும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக 2011, 2021 மற்றும் நிகழாண்டில் நாடாளுமன்றத்தில் தான் தாக்கல் செய்த தனிநபா் மசோதா ஏற்கப்பட்டிருந்தால், சா்வதேச அளவில் தற்போது இந்தியாவுக்கு நோ்ந்துள்ள சங்கடமான நிலை ஏற்பட்டிருக்காது என்று அவா் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.

நிகழாண்டு அவா் தாக்கல் செய்த தனிநபா் மசோதாவில், ‘உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இந்திய உளவு அமைப்புகள் செயல்படும் விதம், தமது அதிகாரங்களை அந்த அமைப்புகள் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்த வேண்டும். அந்த அமைப்புகளை நாடாளுமன்றம் மேற்பாா்வையிட தேசிய உளவு மற்றும் பாதுகாப்பு மேற்பாா்வை குழுவை அமைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்