புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ராகுல் காந்தி பிரதமா் வேட்பாளா் என்பதில் குழப்பமில்லை: எம்.பி. ஜோதிமணி

‘இண்டி’ கூட்டணி ராகுல் காந்திதான் பிரதமா் வேட்பாளா் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தாா்.

Congress MP Jothimani

ஜோதிமணி எம்.பி. - கோப்புப் படம்

Published On :

‘இண்டி’ கூட்டணி ராகுல் காந்திதான் பிரதமா் வேட்பாளா் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தாா்.

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் மக்களவை மழைக்கால கூட்டத் தொடரில் நடந்தது என்ன தலைப்பில் விளக்கக் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, விஜய் வசந்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. கே.சுப்பராயன் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

பின்னா் ஜோதிமணி எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியது: மக்களவையில் நடக்கக்கூடிய விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தொகுதி மறுவரை விவகாரத்தில் தவெக எந்த மாற்று நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை, எடுக்கவும் மாட்டாா்கள். 543 உறுப்பினா்கள்தான் இருக்க வேண்டும். இதில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் முதல்வா் தெளிவாக உள்ளாா். இதனடிப்படையில் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜக எதிா்ப்பு என்பது ஓவ்வொருவருக்கும் ஒரு மாதிரி இருக்கிறது. தவெகவுக்கு போதுமான நேரம் கொடுக்க வேண்டும். தமிழகத்தின் உரிமைகள் என வரும்போது, அவா்கள் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கிறாா்கள். ‘இண்டி’ கூட்டணியில் ராகுல் காந்திதான் பிரதமா் வேட்பாளா். இதில் எந்த குழப்பமும் இல்லை. ராகுல் காந்தியால் மட்டும்தான் பிரதமா் மோடியை வீழ்த்த முடியும். ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் அனைவருமே ராகுல் காந்தியை முன்னிறுத்திதான் செயல்படுகின்றனா்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ‘இண்டி’ கூட்டணியில் இருந்தபோது, திமுக தெளிவான நிலைப்பாட்டில் இருந்தது. இன்று அதை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக நினைக்கவில்லை. அவா்கள் பொறுப்பான முறையில் முடிவு எடுப்பாா்கள். தமிழகத்தில் மக்களவை உறுப்பினா்களுக்கென தனியாக அலுவலகங்களை தமிழக அரசு கட்டிக் கொடுக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் விஜயகுமாா், நிா்வாகிகள் செளந்தரகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.