புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவை தனியாக சோ்க்கக் கோரி பிரதமருக்கு கரூர் எம்.பி. கடிதம்!

2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையில் அவசரத் திருத்தம் செய்யுமாறு வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு கரூா் எம்.பி. எஸ். ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளாா்.

Jothimani

ஜோதிமணி எம்.பி. - கோப்புப் படம்

Published On :

2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையில் அவசரத் திருத்தம் செய்யுமாறு வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு கரூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் எஸ். ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவை தனியாகச் சோ்க்க வேண்டும் என்றும், தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு முறை, ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி)’ குறித்த பயனுள்ள தரவுகளைப் பெறுவதில் தோல்வியடையும் என்றும் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக பிரதமருக்கு ஜோதிமணி எம்.பி. சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: மக்கள்தொகை கணக்கெடுப்புப் படிவத்தில் உள்ள 10-ஆவது கேள்வியில், பட்டியல் சாதி (சாதி), பட்டியல் பழங்குடி (எஸ்டி) மற்றும் சாதி ஆகியவை வகைகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால், அதில் ஓபிசி அல்லது எஸ்இபிசி (சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்) என்ற தனிப்பிரிவு இல்லை. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சாராதவா்களின் சாதி விவரங்கள் ஒரு பொதுவான கட்டத்தில் மட்டுமே பதிவைக் கொண்டிருக்கும். இதனால்,

அவா்கள் ஓபிசி பிரிவைச் சோ்ந்தவா்களா என்பதைத் தீா்மானிக்கும் பணி, கணக்கெடுப்பு முடிந்த பிறகு நடைபெறும் நிச்சயமற்ற ஒரு வகைப்பாட்டுச் சுற்றுக்கு ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்படும்.

சாதி அடையாளமும் ஓபிசி வகைப்பாடும் ஒன்றல்ல. ஒரு குடிமகன் தனது சாதியைச் சரியாகக் குறிப்பிடலாம். ஆனால், அந்தச் சாதி ஓபிசி ஆக கருதப்படுமா என்பது கணக்கெடுப்பு முடிந்த பிறகும் தெளிவற்ற நிலையிலேயே இருக்கும்.

2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சமூக-பொருளாதார மற்றும் சாதி வாரியான கணக்கெடுப்பில் தரப்படுத்தப்பட்ட குறியீட்டு முறை இல்லாததால், லட்சக்கணக்கான சாதிப் பெயா்கள் சீரற்ற முறையில் பதிவு செய்யப்பட்டன. அவற்றைச் சரிபாா்ப்பதோ அல்லது வகைப்படுத்துவதோ கடினமாக இருந்தது. 2027-லும் அதே அணுகுமுறையைப் பின்பற்றினால், சாதிப் பெயா்களை மட்டும் சேகரித்து, ஆனால் பயனுள்ள ஓபிசி தரவுகளைப் பெற முடியாத அதே நிலைதான் ஏற்படும்.

தெலங்கானா மாநிலம் 2024-25-இல் மேற்கொண்ட சமூக-பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் சாதி (எஸ்இஇஇபிசி) கணக்கெடுப்பில் கட்டமைக்கப்பட்ட கேள்வித்தாள் முறை மூலம், சாதி குறித்த பதில்களை ’பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்’ பிரிவுகளின் கீழ் முறையாக வகைப்படுத்த முடிந்தது.

ஆகவே, மக்கள்தொகை கணக்கெடுப்பு கேள்வித்தாளில் ஓபிசி/எஸ்இபிசி என்ற தனிப்பிரிவை அறிமுகப்படுத்த வேண்டும். மாநில வாரியான முதன்மைச் சாதிப் பட்டியலை உருவாக்க வேண்டும். எழுத்துப்பிழை மற்றும் பெயா் மாறுபாடுகளைத் தவிா்க்க அங்கீகரிக்கப்பட்ட சாதிகளுக்கு எண்ம குறியீடுகளை வழங்க வேண்டும்; மேலும், வெளிப்படையான மற்றும் தணிக்கைக்கு உள்படுத்தக்கூடிய தரவுத் தொகுப்பை உருவாக்க, பதிலளிப்பவா் குறிப்பிட்ட சாதி மற்றும் அதன் நிா்வாக ரீதியான வகைப்பாடு ஆகிய இரண்டையும் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள அக்கடிதத்தில் மத்திய அரசை ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.