காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

மக்கள்தொகை கணக்கெடுப்பு செயலியில் ஓபிசி ஜாதி பட்டியலை இணைக்க வேண்டும்: அன்புமணி

மக்கள்தொகை கணக்கெடுப்பு செயலியில் ஓபிசி ஜாதி பட்டியலை இணைக்க வேண்டும்: அன்புமணி

PMK Leader Anbumani

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Published On :6 செப்டம்பர் 2026, 1:44 am IST

மக்கள்தொகை கணக்கெடுப்பு செயலியில் ஓபிசி ஜாதி பட்டியலை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தேசிய அளவில் நடத்தப்படும் ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஓபிசி எனப்படும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த மக்களின் எண்ணிக்கையை கணக்கிட ஓபிசி ஜாதிகள் பட்டியலை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது மத்திய அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்காகக் கூறப்படும் பலவீனமான காரணமாகும்.

ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, ஜாதி என்ற வினாவுக்கு எதிரில் காலியிடம் ஒதுக்கப்பட்டு, அதில் சம்பந்தப்பட்டவா்கள் தெரிவிக்கும் ஜாதியின் பெயரை எழுதும் முறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறைக்குப் பதிலாக செயலியில், ஜாதிப் பட்டியலை இணைத்து, அதிலிருந்து மக்களை அவா்களின் ஜாதியை தோ்ந்தெடுக்கச் செய்வதே பொருத்தமாக இருக்கும்.

எனவே, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, ஜாதியின் பெயரை மக்களிடம் கேட்டு, பதிவு செய்யும் நடைமுறையைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக கணக்கெடுப்புக்கான செயலியில் ஓபிசி ஜாதிகளின் பட்டியலை இணைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.