

தெலங்கானாவில் உள்ள ஜக்தியால் மாவட்டத்தில் ஆளும் காங்கிரஸ் தலைவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள ஜபிதாபூர் கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார் மரு கங்காரெட்டி(56). அவர் மீது கார் மோதியது. அவர் கீழே விழுந்ததும், காரில் இருந்து நபர் கீழே இறங்கி அவரை கத்தியால் குத்திக் கொன்றார்.
கங்காரெட்டியின் உடல் ஜக்தியாலில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இறந்தவர் எம்எல்சி ஜீவன் ரெட்டியின் நெருங்கிய கூட்டாளி என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஜீவன் ரெட்டிக்கும், இறந்தவருக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதனிடையே குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீஸார தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.