
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமான வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நாளை(அக். 23) காலை புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தீவிர புயல்
வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திங்கள்கிழமை காலை மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகியது.
இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணியளவில் மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
தற்போது ஒடிஸாவின் பரதீப்புக்கு தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கு 770 கி.மீ. தொலைவிலும், வங்கதேசத்துக்கு தென்கிழக்கே 740 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த மண்டலம் நிலை கொண்டுள்ளது.
நாளை(அக். 23) புயலாக வலுப்பெறவுள்ளது. இந்த புயலுக்கு டானா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகா்ந்து, அக்.24-ஆம் தேதி வடமேற்கு வங்கக் கடலில் ஒடிஸா - மேற்கு வங்கம் கடற்கரைக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
இந்த புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.