எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தொடரும் விமான வெடிகுண்டு மிரட்டல்கள்: சுமார் ரூ. 600 கோடி இழப்பு

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமான நிறுவனங்களுக்கு கடந்த 9 நாள்களில் சுமார் ரூ. 600 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது

News image
Updated On :23 அக்டோபர் 2024, 1:06 am

DIN

புது தில்லி: இந்திய நிறுவனங்களின் சுமார் 50 விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் செவ்வாய்க்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.

இத்துடன், கடந்த திங்கள்கிழமை இரவுமுதல் மொத்தம் 80 உள்நாட்டு-சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், 3 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமான நிறுவனங்களுக்கு கடந்த 9 நாள்களில் சுமார் ரூ. 600 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனத்தின் தலா 13 விமானங்கள், ஆகாசா ஏர் நிறுவனத்தின் 12 விமானங்கள், விஸ்தாரா நிறுவனத்தின் 11 விமானங்களுக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கடந்த திங்கள்கிழமை இரவில், இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்களின் தலா 10 விமானங்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

இதில் பெங்களூரு-ஜெட்டா (சவூதி அரேபியா) இடையிலான விமானம் தோஹாவுக்கும் (கத்தார்), கோழிக்கோடு-ஜெட்டா (சவூதி அரேபியா) இடையிலான விமானம் ரியாத்துக்கும் (சவூதி அரேபியா), தில்லி-ஜெட்டா இடையிலான விமானம் மதினாவுக்கும் (சவூதி அரேபியா) திருப்பி விடப்பட்டன.

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட விமானங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதர பாதுகாப்பு நடைமுறைகளுக்கு பின் விமானங்கள் புறப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்துடன், கடந்த ஒரு வாரத்தில் 170-க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளம் மூலம் இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர்கதையாகிவரும் நிலையில், இத்தகைய செயலில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.