
வயநாடு: வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார், அதன்பிறகு ராகுலுடன் பிரியங்கா வாகனத்தில் பயணித்த போது எடுக்கப்பட்ட நேர்காணல் விடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த விடியோவில், பேருந்தில் பிரியங்காவும், ராகுல் காந்தியும் ஒன்றாக அமர்ந்து வருகின்றனர். அவர்களுடன் கேரள மாநில தலைவர்களும் உடன் இருக்கிறார்கள்.
ராகுலிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டதற்கு, அவர் தனது சகோதரியுடனான பாசப் பிணைப்பையும் அதனுடன் சேர்ந்து சகோதரருக்கே உரிய நக்கலையும் வெளிப்படுத்தி பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
ராகுலிடம், வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உங்களை விட சிறந்த எம்.பி.யாக பிரியங்கா இருப்பாரா என்ற கேள்விக்கு, ராகுல், கிண்டலாக, அது கொஞ்சம் கடினமான கேள்விதான் என்றார். பிறகு உடனடியாக சிரித்தபடி, நான் அப்படி நினைக்கவில்லை என்றார். இந்த பதிலைக் கேட்ட பிரியங்கா உள்பட அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.
ஒரு சில நிமிடங்கள் ஓடும் அந்த விடியோவில், ராகுலும் பிரியங்காவும் பேசிக்கொள்வதும் பதிவாகியுள்ளது. பிரியங்கா, ராகுலிடம் கேட்கிறார், வயநாடு தொகுதியைப் பற்றி உன் எண்ணம் என்ன என்கிறார், அதற்கு ராகுல், வயநாடு தொகுதியை நான் அதிகம் நினைத்துக்கொள்வேன் என்கிறார்.
வயநாடு தொகுதிக்கு எம்.பி.யாக உன்னைத் தவிர வேறு யாரை நீ பரிந்துரைப்பாய் என்று கேட்டதற்கு, எனது சகோதரி பிரியங்கா என்று பதிலளிக்கிறார் ராகுல்.
இதையும் படிக்க.. காரில் எரிந்த நிலையில் தொழிலதிபர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
தொடர்ந்து, ராகுல் பேசுகையில், அவ்வாறு நான் சொல்வதற்குக் காரணம், அவரை நான் அதிகம் விரும்புகிறேன், அவரை நான் அதிகம் நேசிக்கிறேன் என்பதற்காக அல்ல, ஆனால், அவர் உண்மையில் மிகச் சிறந்த முறையில் பணியாற்றுவார், அவருக்கு மிக நல்ல தகுதிகள் உள்ளன. அவர் நிறைய தகவல்களை எடுத்திருக்கிறார், அது மட்டுமல்ல, அவர் என் சகோதரி என்று சிரித்தபடி கூறுகிறார்.
இதற்கு, பிரியங்கா, வயநாடு மக்கள் மீது ராகுலுக்கு இருக்கும் அன்பைத்தான் இது காட்டுகிறது என்றும், இது அடுத்து வரும் காலங்களிலும் நீடிக்கும் என்றும் பிரியங்கா கூறினார்.
பிரியங்கா பேசியதையடுத்து ராகுல், தனது சகோதரிக்கு உங்களைப் பிடித்துவிட்டது என்றால், உங்களுக்காக அவர் என்னவேண்டுமானாலும் செய்வார், நீங்கள் கற்பனை செய்துகூட பார்க்க முடியாததையும் உங்களுக்காக செய்வார், அவர் வயநாடு தொகுதியை அதிகம் விரும்பத் தொடங்கிவிடுவார் என்று விவரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.