
மேற்கு வங்கத்தில் டானா புயலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்தார்
வங்கக்கடலில் உருவான டானா புயல் அக்.24 நள்ளிரவில் தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையைக் கடந்தது. இதனால் ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இவ்விரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
டானா முன்னெச்சரிக்கையாக மேற்கு வங்கத்தில் தெற்கு பகுதி மாவட்டங்களில் சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இதுதொடர்பாக மமதா கூறியது,
மாநிலச் செயலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணப் பொருள்கள் சென்றடைவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இதையும் படிக்க: தீபாவளியன்று கோயம்பேடு மார்க்கெட் செயல்படும்! பதிலாக...
இயற்கைப் பேரிடரில் ஒருவர் மட்டும் உயிரிழந்ததாக அவர் கூறினார். உயிரிழந்தவர் தனது வீட்டில் கேபிள் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது இறந்தார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.. பிரேதப் பரிசோதனையில் மேலும் தெரியவரும்.
மாநில அரசு இறந்தவரின் குடும்பத்திற்கு உதவத் தயாராக உள்ளதாகவும் பானர்ஜி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.