விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பிரதமர் மோடியுடன் ஹரியாணா, மிசோரம் முதல்வர்கள் சந்திப்பு

தலைநகர் தில்லியில் பிரதமர் மோடியை ஹரியாணா, மிசோரம் முதல்வர்கள் இன்று சந்தித்தனர்.

News image
பிரதமர் மோடியுடன் ஹரியாணா முதல்வர்.
Updated On :26 அக்டோபர் 2024, 1:06 pm

DIN

தலைநகர் தில்லியில் பிரதமர் மோடியை ஹரியாணா, மிசோரம் முதல்வர்கள் இன்று சந்தித்தனர்.

பிரதமர் அலுவலகத்தின் எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ஹரியாணா முதல்வர் நயப் சிங் சைனி, பிரதமர் மோடியை சந்தித்தார்.

இதேபோல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், மிசோரம் முதல்வர் லால் துஹோமா பிரதமர் மோடியை சந்தித்தார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இருப்பினும் சந்திப்புக்கான விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

Story image

ஹரியாணா மாநிலத்தில் அக்.5-ம் தேதி நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.

காங்கிரஸ் 37 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.

இந்த தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.