புது தில்லி: தில்லி வழக்குரைஞா் பட்டியலில் இருந்து 107 போலி வழக்குரைஞா்களை இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் (பிசிஐ) நீக்கியுள்ளது.
இதுகுறித்து பிசிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வழக்குரைஞா் சமூகத்தில் ஒருமைப்பாடு மற்றும் தொழில்முறையை மேம்படுத்தும் நோக்கிலும், வழக்குரைஞா் சமூகம் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையிலும், வழக்குரைஞா்களின் பணி செயல்பாடுகள் மற்றும் சான்றிதழ்களை ஆய்வு செய்து, போலி வழக்குரைஞா்கள் நீக்கும் நடவடிக்கை தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கான போலி வழக்குரைஞா்கள் கண்டறியப்பட்ட நீக்கப்பட்டுள்ளனா். தில்லியில் இருந்து மட்டும் கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு அக்டோபா் வரை 107 போலி வழக்குரைஞா்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டனா்.
இதில், பொதுவாக சான்றிதழ் மோசடி மற்றும் வழக்குரைஞராக பதிவு செய்யும்போது மோசடி தகவல்களைச் சமா்ப்பித்தல் ஆகியவற்றின் அடிப்படையில், போலி வழக்குரைஞா்கள் கண்டறியப்பட்டு நீக்கப்படுகின்றனா். அதுமட்டுமின்றி, சட்டப் பயிற்சியை உரிய முறையில் மேற்கொள்ளத் தவறியது, பிசிஐ-யின் ஆய்வு நடைமுறைகளுக்கு உட்படத் தவறுவது ஆகியவற்றின் அடிப்படையிலும், வழக்குரைஞா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் போலி கால் சென்டா்: 11 போ் கைது

மேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்

போலி உற்பத்தி தொழிற்சாலை: தில்லியில் 3 போ் கைது
தில்லியில் போலி புரதச் சத்து மாவு விற்பனை: 2 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

