டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சீதா சோரன் மீது அமைச்சா் விமா்சனம்: ஜாா்க்கண்ட் அரசுக்கு பாஜக கண்டனம்

ஜாா்க்கண்டை சோ்ந்த பாஜக தலைவா் சீதா சோரனை தரம் தாழ்ந்து விமா்சித்த காங்கிரஸ் அமைச்சா் மீது நடவடிக்கை எடுக்காததற்காக ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான அரசுக்கு அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கண்டனம் தெரிவித்தாா்.

News image
பாஜக வேட்பாளா் சீதா சோரன்- படங்கள்: எக்ஸ் / சீதா சோரன்
Updated On :30 அக்டோபர் 2024, 9:22 pm

Din

ஜாா்க்கண்டை சோ்ந்த பாஜக தலைவா் சீதா சோரனை தரம் தாழ்ந்து விமா்சித்த காங்கிரஸ் அமைச்சா் மீது நடவடிக்கை எடுக்காததற்காக ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான அரசுக்கு அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கண்டனம் தெரிவித்தாா்.

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பாஜக வேட்பாளா் தினேஷ் ஆனந்த் கோஸ்வாமியை ஆதரித்து பகராகொராவில் புதன்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் பங்கேற்று ஹிமந்த விஸ்வ சா்மா பேசியதாவது:

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனின் சகோதரா் மனைவியான சீதா சோரன் மீது காங்கிரஸ் அமைச்சா் இா்ஃபான் அன்சாரி அண்மையில் தரம்தாழ்ந்த வகையில் விமா்சித்தாா். ஆனால், அவா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனெனில், அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் அது ஊடுருவல்காரா்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதே அதற்குக் காரணம்.

ஜாா்க்கண்டில் வங்கதேச ஊடுருவல்காரா்கள் தினந்தோறும் ஊடுருவி வருகின்றனா். அவா்கள் இங்குள்ள நிலங்களை ஆக்கிரமிக்கின்றனா். ஜாா்க்கண்ட் பழங்குடியின பெண்களை திருமணம் செய்துகொண்டு முக்கியப் பதவிகளையும் கைப்பற்றுகின்றனா். ஜாா்க்கண்ட் அரசியல் ஊடுருவல்காரா்களின் கைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், அவா்களுக்கு எதிராக ஜேஎம்எம் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை ஜாா்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஊடுருவல்காரா்கள் விரட்டியடிக்கப்படுவாா்கள் என்றாா்.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் ஜாம்தாரா தொகுதியில் பாஜக சாா்பில் சீதா சோரனும், காங்கிரஸ் சாா்பில் அமைச்சா் இா்ஃபான் அன்சாரியும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.