
நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தீபாவளித் திருநாளான இன்று மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும், இனிப்புகளைப் பறிமாறி தீபாவளி வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
”நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தெய்வீக தீபத் திருநாளில், அனைவரும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், வளமாகவும் வாழ வாழ்த்துகிறேன்.
கடவுளின் ஆசியால் அனைவரும் வளம் பெறட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.