வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தீபாவளி வாழ்த்து..

News image
பிரியங்கா காந்தி- ANI
Updated On :31 அக்டோபர் 2024, 6:39 am

DIN

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீபாவளித் திருநாளான இன்று மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும், இனிப்புகளைப் பறிமாறி தீபாவளி வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தீபாவளி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவு:

“இருளுக்கு எதிராக ஒளி நிறைந்த தீபத்தின் வெற்றித் திருவிழா. அநீதி, பொய் மற்றும் ஆணவத்துக்கு மத்தியில் நீதி, உண்மை மற்றும் அடக்கத்தின் வெற்றித் திருவிழா. வண்ணங்கள், விளக்குகள் மற்றும் மகிழ்ச்சியின் திருவிழா.

தூய்மை மற்றும் வழிபாட்டுக்கான நேரம் இது. ஒரு பருவம் முடிந்து அடுத்த பருவத்தை அன்புடன் வரவேற்கும் ஒரு சிறந்த பண்டிகை. நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, மலையாளத்திலும் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

ராகுல் காந்தி வாழ்த்து

"நாட்டு மக்கள் அனைவருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த திருவிழாவின் ஒளி, உங்கள் வாழ்வில் இருந்து இருளை அகற்றி மகிழ்ச்சி மற்றும் செழுமையை ஒளிர வைக்கும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.