ராஜிநாமா செய்த ஐக்கிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர்!

கட்சிக்குள் சங்கடம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது
கே. சி. தியாகி - நிதிஷ் குமார் (கோப்புப் படம்)
கே. சி. தியாகி - நிதிஷ் குமார் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி, தனது பதவியை ராஜிநாமா செய்து விட்டதாக அறிவித்துள்ளார்.

கே.சி. தியாகி, தனது ராஜிநாமா குறித்து கட்சித் தலைவரும் பிகார் முதல்வருமான நிதிஷ் குமாருக்கு எழுதிய கடிதத்தில் ``கடந்த சில மாதங்களாக நான் தொலைக்காட்சி விவாதங்களிலிருந்து என்னை விலக்கிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

என்னுடைய மற்ற வேலைகள் காரணமாக, செய்தித் தொடர்பாளர் பதவியில் என்னால் பணிபுரிய முடியவில்லை. தயவுசெய்து இந்தப் பொறுப்பில் இருந்து என்னை விடுவியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, ராஜீவ் ரஞ்சன் பிரசாத்தை புதிய செய்தித் தொடர்பாளராக அறிவித்து உத்தரவிட்டுள்ளது, ஐக்கிய ஜனதா தளம்.

இது குறித்து ஐக்கிய ஜனதா தளம் கூறுவதாவது ``தியாகியின் தனிப்பட்ட காரணங்களால்தான் ராஜிநாமா செய்துள்ளார்’’ என்று தெரிவித்தனர்.

இருப்பினும், வக்ஃப் திருத்த மசோதா, சீரான சிவில் சட்டம், காஸாவில் போர் போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து தியாகி கூறிய கருத்துக்களால் ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தியடைந்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது.

மேலும், சமீபத்தில் இஸ்ரேலை குறிவைத்து மக்களவை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கையில் ``எப்போதும் நீதி மற்றும் மனித உரிமைகளுக்காக போராடும் இந்தியா, ஒருபோதும் இனப் படுகொலையில் உடந்தையாக இருக்க முடியாது’’ என்று தெரிவித்திருந்தது.

இந்த அறிக்கையில் தியாகியும் கையெழுத்திட்டிருந்தார்.

கே. சி. தியாகி - நிதிஷ் குமார் (கோப்புப் படம்)
சொல்லப் போனால்... ரத்தமும் தக்காளிச் சட்னியும் அதிகார பீடங்களும்!

இந்த நிலையில், பல பிரச்னைகளில் தனிப்பட்ட கருத்துகளைக் கூறிய தியாகியால், கட்சிக்கு சங்கடம் ஏற்படுவதாக ஐக்கிய ஜனதா தள வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐக்கிய ஜனதா தளத்திற்கும், அதன் கூட்டணி கட்சியான பாஜகவுக்கும் இடையில் குழப்பத்தையும், தேவையற்ற உராய்வையும் உருவாக்கும் சர்ச்சைக்குரிய பிரச்னைகள் குறித்து பொது அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு, தங்களுடன் தியாகி கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று கட்சித் தலைமை உணர்ந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.