காதலியை காண புர்கா அணிந்து சென்றவருக்கு அடி, உதை!
உத்தரப் பிரதேசத்தில் காதலியை பார்ப்பதற்காக புர்கா அணிந்து பெண்ணை போன்று சுற்றித்திரிந்தவரை பிடித்த மக்கள் அடித்து உதைத்துள்ளனர்.
மேலும், அவரின் புர்காவை அகற்றி சோதனை செய்ததில், அவரிடம் சிறிய ரக துப்பாக்கி இருந்ததை தொடர்ந்து, காவலர்களிடம் அந்த இளைஞரை ஒப்படைத்தனர்.
புர்காவில் சுற்றிய காதலன்
உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத் பகுதியில் காதலியை பார்ப்பதற்காக புர்கா அணிந்து சந்த் புரா என்ற இளைஞர் சென்றுள்ளார்.
காதலியின் குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த சந்த்தில் நடத்தையில் சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து, அந்த பகுதி மக்கள் அவரை விசாரித்துள்ளனர்.
குழந்தையை கடத்துபவர் அல்லது திருடனாக இருக்கக்கூடும் என சந்தேகித்த மக்கள், புர்காவை அகற்றும்படியும், ஆதார் அட்டையை காண்பிக்குமாறும் சந்த்திடம் கேட்டுள்ளனர்.
துப்பாக்கி பறிமுதல்
சந்த்தின் புர்காவை அகற்றியவுடன், அவர் ஆண் எனத் தெரிந்தவுடன் அங்கிருந்தவர்கள், அவரை முழுமையாக சோதனை செய்தனர். அப்போது, சிறிய ரக துப்பாக்கியை சந்த் வைத்திருந்ததை தொடர்ந்து மக்கள் அதிர்ச்சி அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, சந்த்தை அடிக்கத் தொடங்கிய மக்கள், உடனடியாக காவல்துறையிடம் அவரை ஒப்படைத்தனர்.
மேலும், சந்த்தை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.