பாஜக விசுவாசிகளுக்கு, கட்சி எப்போதும் அங்கீகாரம் அளிக்கும்: ரஞ்சன் தாஸ்

வளர்ச்சிக்கு ஒரு பகுதியாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்க வேண்டும்
ரஞ்சன் தாஸ்
ரஞ்சன் தாஸ்
Published on
Updated on
1 min read

பாஜக விசுவாசிகளுக்கு கட்சி எப்போதும் அங்கீகாரம் அளிப்பதாக மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக தலைவர் மிஷன் ரஞ்சன் தாஸ் கூறியுள்ளார்.

கரீம்கஞ்ச் மாவட்டத்தில் இருந்து நான்கு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார் தாஸ். பாஜகாவுக்கு விசுவாசமாக இருந்தால் தலைமை எப்போதும் அவர்களுக்கு சரியான பொறுப்பும் அங்கீகாரமும் வழங்குகிறது.

அசாமில் இருந்து இந்து வங்காளத் தலைவரை மாநிலங்களவைக்கு பாஜக நியமித்தது இதுவே முதல் முறையாகும்.

மாநிலத்தில் கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கட்சியின் செயல்பாடு மோசமாக இருந்ததாகவும், தேர்தலைத் தொடர்ந்து, மாநிலத்தில் கட்சி அலுவலகங்களைத் தொடர்வது மிகவும் கடினமாகிவிட்டது. இதையடுத்து ஏராளமான எம்எல்ஏக்களை இழந்தோம். அதன்பின்னர் கட்சித் தொண்டர்கள் அளப்பரிய பணிகளைத் தொடர்ந்ததால் பாஜக மீண்டும் வலுவானது.

கரீம்கஞ்ச் நாடாளுமன்றத் தொகுதியைப் பற்றியும் தாஸ் பேசினார், மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது, அந்தத் தொகுதியில் முஸ்லீம் வாக்காளர்கள் இந்து வாக்காளர்களை விடக் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் இருந்தனர்.

கரீம்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. ஆனால் எங்கள் கட்சித் தொண்டர்கள் இந்தத் தொகுதியில் வெற்றி பெறக் கூடுதலாக பாடுபட்டனர்.

முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்தலுக்கு முன்பு ஐந்து முறை கரீம்கஞ்ச் தொகுதிக்கு வந்து கட்சித் தொண்டர்களையும் உள்ளூர் தலைவர்களையும் உற்சாகப்படுத்தினார். இதுவே பாஜக வெற்றி பெறக் காரணமாக இருந்தது.

அசாமில் 2026ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வளர்ச்சிக்கு ஒரு பகுதியாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்க வேண்டும். இதை மனதில் வைத்து, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இப்போதிலிருந்தே தயாராக வேண்டும் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com